தடை செய்யபட்ட இதயம்-2

அன்று இரவு ஒரு மணி.

உன் தெருவில் நான்,
நாய்கள் ஏதும் குரைக்கவில்லை
அடிக்கடி பார்த்து பழக்கபட்ட முகம் என்பதால்.

அமைதியான இருளில்,
உன் மூச்சின் சத்தத்தை தேடிபிடித்துக்கொண்டிறுகிறேன்,

பைக் பழுதென்று நானும்
நண்பனும் நின்றிருந்தோமே..
அதே இடம் தான்,ஆம்
உன் வீட்டின் எதிரில் தான் இன்றும்

பார்ததும் கை உதரி உள்
வீட்டுகுள் ஓடினாயே..!
அதே நினைவில் இன்றும் நான்,

தங்கை பார்த்துவிடுவாள் என்று
சைகை செய்தாயே,
அப்போது சிரிப்புடன் இன்றும் நான்,

பக்கத்துவீட்டுக்கு போவதாய்
பாதை அனுப்பி வைத்தாயே
அதே நினைவுடன்....
அங்கிருந்து நகர்கிறேன்...

உன்னால் சிறை செய்யபட்ட
இதயத்துடன் அன்று,
தடை செய்யபட்ட
இதயத்துடன்...இன்று


"தடை செய்யபட்ட இதயம்" எனும் என் புத்தகத்திலிருந்து...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (27-Nov-17, 11:48 pm)
சேர்த்தது : சுரேஷ் காந்தி
பார்வை : 104

மேலே