வார்த்தை விளையாட்டில் திருமுருக கிருபானந்த வாரியர்
தருமிக்கு பாட்டெழுதிக் கொடுத்தவர் சிவாஜி
வார்த்தை விளையாட்டில் திருமுருக கிருபானந்த வாரியரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. .
பழைய திருவிளையாடல் படம் வெளியான நேரம். வாரியார் சுவாமிகள் ஒரு கோவில் திருவிழாவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். சொற்பொழிவுக்கு இடையில் வாரியார் கேள்விகள் கேட்பார்.
அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி “தம்பி! தருமிக்கு பாட்டு
எழுதி கொடுத்தது யாரு?” என்று கேட்டார்கள்.
அந்த பையன் சட்டென்று “சிவாஜி ” என்று கூறினான். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.