சிறுவர் துஸ்பிரயோகம்

சிற்றலை ஓடிவர

சிறுநண்டு குழிபுக

சிதறுண்டு கிடந்த சோகி

சிறுகை கொண்டு சேர்த்தேன்.

பொறுக்கிய சோகி சேர்த்து

பொதுவில வைத்து விட்டு

பொத்தலானவென் பையிலிருந்த

பொரி முறுக்கை விற்று வந்தேன்.

கடற்கரை ஓரத்தில்

காலாற நடந்துவந்த

கனவான்களிடம் தான்

காசாக்கினேன் என் பொரி முறுக்கை.

சிக்கடித்த தலையுமாய்

சீரற்ற உடையுமாய்

சில்லறைக்கு முறுக்குவிற்கும்

சிறுபையன் தான் நான்.

இருக்கின்ற முறுக்கு விற்று

இனிதாய் திரும்பும் வேளை

இருக்குது சில்லறை

இவளவும் உனக்கென்றான்.

எனக்கேன்றதாலோ என்னவோ

ஏழைமனம் விரும்பியது

எதையும் பார்க்காது

ஏங்கியபடி போனதவன்பின்னே.

போனவன் சேர்ந்தான்

பொதுவிடுதி ஒன்றினறை

போனதுமெனை உள்ளழைத்து

பொருந்திய வாசலைத்தாள் செய்தான்.

பூடியவன் மீண்டு என்னில்

பூட்டியிருந்தவென் ஆடையகற்றி

புதுமையாய் எதோ செய்தான்

புதுவுடல் களைக்க வைத்தான்.

ஒருக்களித்து இருந்த நான்

ஓரமாயிருந்த தொலைக்காட்சியில் பார்த்தேன்

ஓடியது ஒரு செய்தி இங்கு

ஓங்கிவளர்ந்துவிட்டதாம் சிறுவர் துஸ்பிரயோகம்.

எழுதியவர் : (30-Nov-17, 5:27 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 621

மேலே