ஒப்புக் கொள்ள மறுக்கிறாள்

அவள் உதடு பேச மறுத்த வார்த்தைகளை
அவள் கண்கள் பேசியது (தந்தை உடனிருக்க ) !
அவள் உள்ளம் சொல்ல மறுத்த வார்த்தையை
அவள் உமை மொழிகள் சொல்லியது (அண்ணன் உடனிருக்க ) !
அவள் பேச மறுத்த வார்த்தைகளை
அவள் தயக்கம் சொல்லியது (உறவுகள் உடனிருக்க ) !
அவள் காத்திருக்க மறுத்த வார்த்தைகளை
அவள் நேரம் சொல்லியது ( தோழிகள் உடனிருக்க ) !
அவள் காதலிக்க மறுத்த வார்த்தைகளை
அவள் கண்ணீர் சொல்லியது (அவள் அம்மா உடனிருக்க ) 1
அவளுக்கு என்னை காதலித்து பிரிய விருப்பமில்லை என்று.
படைப்பு
எழுத்து ரவி.சு