பாடம் கற்பிக்கும் ஒகி புயல்
மூனு நேர வேளையிலும்
பஞ்ச பாட்டப் பாடிப்புட்டு
சொட்ச ரூவா நோட்டுக்காக
மனசுல கள்ளாட்டம் ஆடுனோமே
அந்த சொட்ச ரூவா நோட்டுக்குள்ள
காந்தி போட்டோவ பாருங்கடா
நம்ம ஓந்தி குணத்த பார்த்திட்டுதான்
அப்படி ஏளனமா சிரிக்கிறாரு
தண்ணி தண்ணி தண்ணினு
அத எண்ணி அழுத 'குடி'மகனே
வேறு தண்ணிய பாத்ததுமே
மாறி மாறி பேசுனோமே
இப்ப ஊரு புள்ளா தண்ணி வந்தும்
"ஐ அம் சாரி"னு முடுச்சிடுவாய்ங்க
அடப்பாவிகளானு கத்துரோமே
அந்த பாவத்துக்கு சாவியே நாமதான்டா
ஆரத்தி எடுத்த காசுலதான்
இந்த வாரத்தையே ஓட்டுனேனும்
காசு போட்டவன் சாரதினும்
ஊரு புள்ளா சொன்னீங்களே
இப்ப-ஆசக்காட்டி மோசம் போனேன்னு
இந்த தேசத்துல ஓசபோட்டா
வேசம் போட்டு நடுச்சவன்லாம்
நம்மள ஏசிட்டுதான் போவானுங்க
அ.ஜுசஸ் பிரபாகரன்