மழை மழை

" எதற்கெடுத்தாலும் அலட்டிக் கொள்ளும் இந்த மனிதர்கள் எப்போது தான் திருந்துவார்களோ? ".

மேகங்கள் இரண்டு பேசிக்கொண்டிருந்தன..

" பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே, எங்களைக் காத்து இரட்சிப்பீராக. "

தேவாலயங்களில் பிரார்த்தனை வானைத் தொடுகிறது..

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நடைபாதை மூழ்கிப் போக முதியவர் தடுமாறி, தடுமாறி இடறிவிழுகிறார்...

வீடுகளில் முடங்கிய மனிதர்கள்...

" மிட்டாய் வேண்டும் அம்மா. "

கெஞ்சுகிறது குழந்தை...

" மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும். மிட்டாயெல்லாம் கிடையாது. சும்மா இரு. "

மிரட்டுகிறது அம்மாவின் குரல்...

அழுகிறது குழந்தை...

" அரசாங்கம் உதவ வேண்டும். ஏற்பட்ட நஷ்டத்திற்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும். "

ஊடகங்களின் கதறல்கள்...

" வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கு நான் ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? "

கட்டபொம்மன் திரைப்படம் கைபேசியில் காணோளியாய் நானும் கண்டு இரசித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் ஆர்வமாக...

கலங்க வேண்டிய அவசியமில்லாமல் கலங்கிக் கொண்டே இருக்கிறோம்..
கலங்கிக் கொண்டே வாழ்கிறோம்...
அந்தக் கலக்கத்தில், பதற்றத்தில் வாழ்நாளில் பாதியைத் தொலைக்கிறோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-17, 1:28 pm)
Tanglish : mazhai mazhai
பார்வை : 2563

மேலே