நண்பனுக்கு திருமண வாழ்த்து
இன்பமென்னும் வீட்டில்,
இருவேறு விதைகளாய் விழுந்து..
இளமையென்னும் சோலையிலே,
இருவேறு செடிகளாய் வளர்ந்தீர்..
புத்துணர்வு பெற்று-நீங்கள்
புதுமரமாய் வளரவே, திருமணமென்னும்
புரட்சி வேர் பற்றிக்கொண்டதின்று..
இருமரமும் இனி ஒரு மரம்!!
இது இறைவன் தந்த வரம்!!
அம்மரத்திலே,
அற்புத பூக்கள் பல பூக்கும்,
அதில் அதிசய காயொன்று கனியும்,
இன்பமென்னும் வீட்டில் மீண்டும் விதைகள் விழும்,
அது வண்ணமலர் சோலையாக மாறும்..!!
வாழ்க வளமுடன்..!!