இயற்கையின் வைராக்கியம்

வெயிலின் தாக்கத்தில் உலகம் வெப்பமயமாகிறதே என்ற கவலை...
மழையின் தாக்கத்தில் உலகம் குளிர்மயமாகிறதே என்ற கவலை...
ஓயாத மனித சமுதாயத்தின் ஆதிக்க உலகில் என்றுமே தீராத கவலை...

வா தோழா,
கவலை உன்னை கரைத்துவிடும்...
வா தோழா,
இயற்கையின் பரிணாமத்தில் கவலையேனடா?...

வா தோழா,
இப்படி கூவினால் மட்டும் வந்துவிடவா போகிறீர்கள்!?...

ஆசையின் வாயில் அகப்பட்டான், அடங்கமாட்டான்...
அழாமலும் இருக்கமாட்டான்...
பலவீனமானவன்,
முற்றிலும் பலவீனமானவன்...

வைராக்கியம் இல்லாதான் வாழ்வு,
கண்ணாடி மாளிகை போலே,
அழகாக இருந்தாலும் கல்லெறியப்பட்டால் சுக்குநூறாய் உடைந்து போகும்...

தூய அன்பில் வேண்டும் வைராக்கியம்...
மாசுறா செயலில் வேண்டும் வைராக்கியம்...
வைராக்கியம் இழந்தால் வாழ்வே துர்பாக்கியம்...
வளர்த்துக்கொள்வோம் இயற்கையின் வைராக்கியம்...

புறணிகளை புறந்தள்ளி, புரளிகளை நம்பாமல் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் அசையாத வைராக்கியம்...

எதிர்காலம் குறித்த பயம் அவசியமற்றது நிகழ்காலத்தில் நாம் சரியான முறையில் வாழ்ந்தால்...
தியாகம் பிறப்பது வைராக்கிய மனதிடம்...
காலிரண்டையும் இழந்தாலும் வைராக்கியம் இருந்தால் கைகளிரண்டாலும் நடக்கலாம் ஊனம் மறந்து....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-17, 3:46 pm)
பார்வை : 1350

மேலே