நண்பனாசான்

நணபனாசான்

அந்நியனாய் வந்தேன் உன் நண்பனாக்கினாய்
பிடிவாதமாய் இருந்தேன் விட்டுக்கொடுப்பதை கற்பித்தாய்

மதங்களை விட மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினாய்
தேர்வு எழுத தடுமாறிய போது நம்பிக்கையை ஊட்டினாய்

பல தென்மாவட்ட இளைஞர்களின் பாலச்சந்தர் ஆனாய்
பலருக்கு நீ ஒரு நம்பிக்கை நட்சத்திர மானாய்

நீ பெற்ற டீயுஷன் பணத்தை எங்களுக்கு செலவு செய்தாய்
நீ பெற்ற ஊதியத்தையும் எமக்கு தாரை வார்த்தாய்

விவேகானந்தர் கார்ல் மாக்ஸ் சேகுவரா, ஹோஷோவையும் பயின்றாய்
குரானைப் போல் கீதை பைபிள் ஜெயினிசம் வேதாந்தமும் பயின்றாய்

அனைத்து சாஸ்திரங்களை பயின்ற நீ வானத்தின ஓசோன்
உன் அநுபவத்தால் உணர்த்தும் எங்கள் ஆன்மிக ஆசான்




ராரே

எழுதியவர் : ராரே (2-Dec-17, 9:15 pm)
பார்வை : 212

மேலே