நான் நிலா கடல்

அச்சாதரண அலையையும்
ஆழி பேரலையாய்
மாற்றிடும் மாயம்
அவள் அழகிய பாதத்திற்கு உண்டு
.......................
கடற்கரையில் நீயும் நானும்,
கோவத்தால் சிவக்கிறான்
சூரியன்
சரியான பொறாமைகாரன்
அவன்
......................
உன் காலடி தொடமுடியாத
அலைகள் தற்கொலையில்
நுரைகக்கி சாகின்றன
.......................
கடல் நீர் உவர்க்கதானே வேண்டும்
அதென்ன
உன் பாதம் பட்ட கடல் நீர் மட்டும் இனிக்கிறது
.......................
சுந்தரியே உனை கவரவே
சுனாமியாய் வருகிறான் கடல்
நான் சுனாமிலயே சும்மிங் அடிப்பேன் என்று தெரியாமல்
.......................