ஜுகல்பந்தி பார்வையும்,காதலும்

முதல் பார்வையிலேயே
காதல் வருவது ......இது
ஒருபுறம் இருக்க
சிலருக்கோ முதல் பார்வை
மோதல் தந்து ஒரு
போர்க்கள பார்வையாய்
மாறினாலும் , இறுதியில்
மோதலே காதல் தந்திடும் !
தேன் கனியாய் -எப்படி
'ஜுகல்பந்தி'பாடும்
இரு பாடகர்கள் , ஒருவர்
ஐரோப்பிய பாரம்பரிய
இசை பாடகர், மற்றோருவர்
தென்னிந்திய பாரம்பரிய
இசை பாடகர் ,இவ்விருவரும்
இவ்விசை இரண்டிற்கும்
பொதுவான இசை எடுத்து
சேர்த்திட விழையும் பொது
முதலில் மோதலுண்டு
இறுதியில் அவ்விசை
இரண்டும் சங்கமிக்க,
ஜுகல்பந்தி தந்திடும்
இன்னிசை விருந்து,
உள்ளத்திற்கும் செவிக்கும் !
ஒரு பெண் ,ஒரு ஆண் முதல்
பார்வை மோதலில்
உதிக்கலாம் , ஆனால்
போக போக தெரியும்
அதுவும் ஓர் ஜுகல்பந்தியாய்
மாறி காதல் உறவு தந்திடுமே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-17, 12:29 pm)
பார்வை : 56

மேலே