உன் நினைவு

முடிந்து வைத்த இரவுகளில்
முழுவதுமாய் உன் நினைவு

சுருக்கு பையிலும்
சுகமாய் உன் நினைவு

எழுந்தவுடன் என்னுடன்
ஒட்டிக்கொள்ளும் உன் நினைவு

கண்ணாடி முன்னும்
களங்களாய் உன் நினைவு

நினைவு தோன்றலிலும்
நித்தம் உன் நினைவு

கைவிரல்களிலும்,
கண் இமைக்குள்ளும
உதட்டுச்சாயத்திலும்
உள்ளிருக்கும்
உயிரிலும் உன் நினைவு...

நிசமாய் மறக்க நினைத்தாலும்
நித்தம் நினைத்தபடியே
உன் நினைவு
என் பயணம்

எழுதியவர் : (3-Dec-17, 2:09 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : un ninaivu
பார்வை : 131

மேலே