மனசுக்குள்ள
![](https://eluthu.com/images/loading.gif)
தஞ்சாவூர் பொட்டபுள்ள
நான் தாலிகட்ட போற புள்ள
வேணானு போனேன் தள்ளி
விடாம தான் வந்தா கள்ளி
என் மனசுக்குள்ள நொழஞ்சா மெல்ல
என்ன மாமானு அழைச்ச புள்ள
என்ன உசுரா நெனச்ச புள்ள
என் உசுருல கலந்த புள்ள
என்ன முத்தத்தால அடிச்ச புள்ள
என்ன முழுசா புரிஞ்ச புள்ள
என்மேல இஷ்டப்பட்டு
என்னால கஷ்டப்பட்டா
தன்னத்தான் வருத்திக்கிட்டா
தாயத்தான் தள்ளி வச்சா
என்ன அப்படியே ஏத்துக்கிட்டா
என் ஆசையெல்லாம் சேத்துக்கிட்டா
என்ன தேடித்தான் வந்த புள்ள
என் நாடியும் நீ தான் புள்ள
எனக்கு வரமா கெடச்ச புள்ள
நான் தரமானு நெனக்கவில்ல
என் கவிதையெல்லாம் நீ தான் புள்ள
என் காதல் சொல்ல வார்த்த இல்ல
என்னால பட்டதெல்லாம் போதும் புள்ள
எல்லாம் விட்டுபுட்டு வாடி புள்ள
பெத்துக்கலாம் நாலு புள்ள
என் பொண்டாட்டி நீ தான் புள்ள
வேறென்ன நானும் சொல்ல
உன்னோட வாழ வேணும் ஊரு சொல்ல!!!