ரசிக்காத அனுபவம்..
வாழ்க்கை எனும்
பயணத்தில்,
எண்னிலடங்கா முற்றுப்புள்ளிகள்..
கரையை
கடக்க முடியாத
கடல் அலைப்போல..
தோல்வி பயத்தில்
துவண்டு விடுகிறேன்..
தடைகள் ஆயிரம்
மடைகள் போடுகிறது..
தாண்டி வருவதும்
கடினமாகிறது..
மீள்வது என்னாளோயென
ஏக்கம் கொள்கிறேன்..
சூரியன் கூட
குழப்பத்தில் எழுந்து,
சந்தேகத்தில் மறைகிறது..
குழப்பம்!!
யாரும் ரசிக்காத
புதுவித அனுபவம்..