வெற்றி

கையில் கோப்பையை தந்து
கழுத்தில் மாலை இட்டால் மட்டும்தான்
வெற்றியா???
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த
வயலில் பாடுபட்டு உழைத்து
இப்போதும் விதைத்த விதையின்
இரு மடங்கே கிடைத்தாலும்
நூறு பேருக்கு உணவு கிடைத்துவிட்ட
சந்தோசத்தில் மாரு வருடமும்
விவசாயம் செய்கிறானே விவசாயி
அதுவும் வெற்றிதான்!!
ஒரு இரு வித்யாசம் அது ஒரு
தனி மனிதனின் வெற்றி,,,,
இது ஒட்டுமொத்த உலகின் வெற்றி!!!!!!!!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (3-Dec-17, 10:02 pm)
Tanglish : vettri
பார்வை : 205

மேலே