முதல் பார்வையில் காதல்

வழி சொன்ன காதல் ..
✍🏼 மருதுபாண்டியன். க
வஞ்சி
அவள் வழிகேட்க
திருவரங்க
நிலம் காண. . . .
முதல் பார்வையில்
முகம் அழம்பி
அழகாய்
அவன்
தலைநிமிர்ந்து
தயக்கத்தில் தடுமாறி
தலைகவிழ்ந்தான் ....
அவள் எழில்
முகம்கண்டு!!
அவள்
கண்கள் தீண்டி
சாகுமுன்னே!
தாமரையில் நிறமுமில்லை
ரோசாவும் மலருமில்லை
இது என்ன புதுவகையோ?
ஐயம் தீர்க்க
சற்று நேரம்
அவள் இதழ் கண்டான் .....
ஐயம்
பன்மை பெற
நீண்ட நேரம் சுகம்காண
வழி சொல்லிட
மெனக்கெட்டான் ....
உச்சி முகரும்
தாயைப்போல்
தோற்றம்கொண்ட
மலைக்கோட்டை
திசை சொல்லி . .
வெண்மயில்
தோகைமேல்
பனிமலரும் அழகோடு
மேகக்கூட்டங்கள்
தமிழ் பாடி
அந்த காவேரி பாலம்
கடந்து செல்லும்
வழி சொன்னான். . .
அவளும்
மயங்கித்தான்
போனாள்
அந்த காவிரி பாலம்
கடக்கயிலே....
கண் இமைக்க
அவள் மறந்து
தென்றலோடு முகம் மலர்ந்து
தூது விட ஆசைக்கொண்டாள். . . .
கரையோரம்
தென்னைமரம்
அதன்
மடியில் படுத்துறங்கும் ..
பச்சைப்புல்லும்
கையசைத்து
கல்லணைக்கும் வழி சொல்லும். . . .
வழி கேட்டு
விழி தந்தாள் . .
அவன்
சாடையாக காதல்
சொன்னான். . .
அடங்காத
மான் தான்
அவள் விழியோ. .
அங்கும்
இங்கும் தடுமாறி
அவனிடம் தஞ்சம்
என்றது. . .
அவளே
தென்றலாக
கட்டி கொள்ள
கூடாதோ ...
ஆசைக்கொண்ட
அவன்
மூச்சுக்காற்று . . .
சூடாகி மிதமாக
கைப்பிடித்து
அழைத்துச்சென்றது
காதலியாக. . .
அதோ
சென்றுவிட்டாள் ..
அவன்
கைப்பேசி
எண்களுடன். . .
திருவரங்க
காதல் கூடிடுமோ?
அந்த
அரங்கன்தான்
அறிவானோ????