சென்ரியு முயற்சி

மின்கலம் தீர்ந்தது
அலைபேசியில்
தடைபட்டது விளையாட்டு...!

அதிபயங்கர விபத்து
மீண்டும் உயிர்கிடைத்தது
கணிணி விளையாட்டு...!

நெடுநேரம் விளையாடியும்
வியர்க்கவில்லை
கணினி விளையாட்டு...!

அலைபேசியில் விளையாட்டு
ஆர்வமாய் விளையாடும் நேரம்
அழைப்புகள் தொந்தரவாய்...!

அடையாளப் போரில்
அடையாளம் இழந்தது
தர்மயுத்தம்....!

திரைப்பட விளம்பரம்
இவ்விடம் இலவசம்
அரசியல்வாதிகள்...!

முன்னிரவு சமைத்தது
காலையில் சூடாக
நாளேடு....!

ஊடகங்களுக்கு
நல்லோர்களை விட
தீயோர்களே நல்லோர்கள்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (4-Dec-17, 5:30 pm)
பார்வை : 296

மேலே