கம்பன் ஏமாந்தான்

கம்பனே - என்
காதலியின் எழிலழகை - உன்
கற்பனையில் கூட எழுதிட இயலாது.
கேளாயோ கம்பனே - என்
காதலியின் எழிலழகை.
சோலைக்குள்
இசைபாடும் குயிலவள்
சோகத்தைத்
துவைக்க வந்த தென்றலவள் - தன்
சிவந்த இதழால்
சிரித்து மயக்கும் தேவதையவள்.- அவள்
விழித் திறந்தாள் - அழகு மயில்
விரித்தாடும் தோகையவள்
எனக்காகப்
பூத்து வளர்ந்த மலர் அவள்.
இயற்கையையே மிஞ்சும் - என்
இன்ப லோகத்தின் எழிலானவள்.
உன் வீட்டு தறி கவி மட்டும் பாடும். - ஆனால் அவள்
உணர்வு பட்டதும் இயற்கையே ஜதி போடும்.
நீ வாழ்ந்தக் காலத்தில் - என்னவள் பிறந்திருந்தால்
நிலைகெட்டு போய் இருப்பாய். - அதில் மட்டும்
நான் பாக்கியசாலி. - ஏன் தெரியுமா? - இன்று
நீ இல்லையே. - எனக்காகப் பிறந்தவளை
நான் மட்டும் ரசிக்க அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வகையில் - கம்பனே - நீ ஏமாந்து போனாய். - இன்று நீ
இருந்தாலும் அவள் முன் காணாமல் போவாய்.- இல்லையேல்
இயன்றவரை தமிழில் உள்ள எழுத்துக்களை
குறைக் கூறுவாய்.

எழுதியவர் : சங்கு chandramoulee (5-Dec-17, 7:41 am)
பார்வை : 101

மேலே