வறுமை
எங்கள் வீட்டுத் தின்னையில்
பள்ளம் மேடுகள்,
வறுமையின் சுவாசக்காற்று
தவறாமல் வீசுவதால்!
தாழ்வாரம் கூட
தலைகுனிந்து காணப்படுகிறது..
ஏழ்மையில் நாங்கள்
ஏணிப்படியின் உச்சியில் நிற்பதால்..
மோட்டு வளையில் ஓட்டைப்போட்டு
கதிரவனையும், மதியையும் தூது அனுப்பி
இறந்துவிட்டோமா, உறங்கிவிட்டோமா என்று
கண்காணிக்கிறது வானம்!