விதி எழுத்து

நெற்கதிர் போர்வைக் காணக் கண்டு
தீக்கதிர் போர்வையில் கருகிச் சாவு
வெந்நீர் இன்பத்தில் குளியல் தேட
வெப்பக் கூட்டிற்குள் சிறைதான் மிச்சம்
அடுப்பில், தினந்தினம் சூடு மெதுவாய் ஏற -வேண்டாம்
ஒரு முறை ஏறு வழியில்லா முடிவு
ஏர் சுமக்கும் தோள், கருவி பிடிக்கும் கை,
களம் கானும் கால், சூரியன் எரிக்கும் மேனி
ஆமாம் உண்மைதான்
நடுத்தெருவில் எரியும் மேனி ....

வாகை சூடும் கைகள்
ஏனோ வட்டிச் சங்கிலி பூட்டப்பட
களம் கானும் கால்களை ஏனோ
கந்து வந்து சுற்றிவிட ..
இரு கை விரித்து அன்னமிடும் இனமோ
இரு கை கூப்பி மண்டியிட்ட காலமோ
விவசாயம் என்ற சொல்லே
இங்கு சாயம் போன துணியோ
என்ன கொடுமை இங்கு
இது என் பாட்டன் கண்ட கனவோ .....

🌿🌿🌿

எழுதியவர் : ஹரிஹரன் சிவக்குமார் (6-Dec-17, 5:40 am)
Tanglish : vidhi eluthu
பார்வை : 273

மேலே