பெண் உரிமை

பெண் என்றாலே அமைதியானவள், அடக்கமானவள் என எல்லோருக்கும். இதை பயன்படுத்திக்கொண்டு நம்முள் பலர் பெண்களை அடிமையாக நடத்துகிறோம். பல பெண்களுக்கு தான் நினைத்தது போன்று வாழ முடியவில்லை. பெண் பிறந்த உடன் பெற்றோர்கள் தன் குழந்தை இந்த படிப்பு தான் படிக்க வேண்டும், இங்கு தான் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த பெண்ணும் பெற்றோர் சொல்வதை கேட்டு அவர்கள் சொல்லும் பள்ளியில் படித்து முடிக்கிறாள். பெரிய பெண் ஆனவுடன் அவள் இந்த படிப்பு படிக்க வேண்டும், இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் அவள் பெற்றோர்கள் அவளுக்கு எதிராக உள்ளார்கள். அதையும் பொறுத்து கொண்டு பெண் படித்து முடித்து வருகிறாள். அதன் பின் அந்த பெண் வேலைக்கு செல்ல நினைக்கும் போது பெற்றோர்கள் அவளுக்கு விருப்பம் இல்லாத ஓர் இடத்திற்க்கு வேலைக்கு செல்ல சொல்கிறார்கள். அதையும் பொறுத்து கொண்டு அவள் விருப்பமே இல்லாத இடத்திற்க்கு விருப்பத்துடன் செல்கிறாள். அதன் பின் அவள் விருப்பத்துடன் வேலை செய்ய தொடங்கும் போது பெற்றோர்கள் அங்கு வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள். அந்த முடியாது என்றோ அல்லது தன் உரிமைக்காக போராடினாளோ படித்த திமிரில் பேசுகிறாள் என்று கூறுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் வாருங்கள் பெண்களே உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் வாருங்கள்

எழுதியவர் : விஷாலி (7-Dec-17, 6:48 pm)
சேர்த்தது : vishali
Tanglish : pen urimai
பார்வை : 596

சிறந்த கட்டுரைகள்

மேலே