விடைகொடு மனமே

வெரசா வரனும்
வெள்ளி கெழமயினு
தவியா தவிச்ச
காலம்கடந்து போச்சுது

புதுசா எழுதுறேன்
நாள்க்காட்டி ஒன்னு
அண்ணா பிரியுற
வெள்ளிகெழம இல்லாம

உசுரா பழகுன
மனுசன் ஞாபகம
முழுசா நெறஞ்சு
நிக்குது நெஞ்சுல

புனலா ஒடுது
மொத்தப்பய கண்ணீரும்
இதுதா பாசம்னு
இதமா சொல்லிட்டு

விடுறா என்னனு
வெறங்கைய வீசினாலும்
வலுவா புடிச்சுப்போம்
வீசுன கையையும்

தலைவா போகாதன்னு
தரையில ஒக்கார்ந்து
தர்ணா செய்யவும்
தயங்காம எறங்கிடுவோம்

போறதுதா ஒரேமுடிவுன்னா
சத்தியம் ஒன்னு செஞ்சுகுடு
வாரத்துல ஒருநாளாச்சும்
வெட்டிகத பேசவர்றேன்னு

எழுதியவர் : (7-Dec-17, 7:09 pm)
பார்வை : 244

மேலே