நட்பின் மீது காதல்

நாங்கள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அல்ல..!
வகுப்பறை எனும் கருவறையில் கருதரித்தோம்..!
சேர்ந்தே ஜனித்தோம்....!
விளைவுகள் அறிய வண்ணத்து பூச்சியென பள்ளியில் வட்டம் இட்டோம்..!
எங்கள் எதிர்காலம் பற்றிக் கவல் கொள்ளாது
பொழுதுகளை விளையாடித் தீர்த்தோம்..!
வாயகள் ஓயாதுப் பேசித தீர்க்க
எங்கள் உரையாடல் தீரந்த்தும்இல்லை..!
துன்பங்களில் தோள் சாய்க்க தோள் கொடுத்த தோழிகளும்..!
கவலைகள் கலைந்திட்டா தோழர்களும்..!
அள்ளி அரவனைத்திட்ட ஆசிரியர்களின்
ஒட்டுமொத்த நினைவுகளை சுமந்தே
நான் பிரிகையில் ...
என் எதிர்காலப் பயணத் தொடக்கம்..
இப்படி ஓர் பிரிவு வராமலே இருந்திக்கலாம்
நானிங்கு எம் எண்ணங்களை
உங்கள் மீதே தவழவிட்டு...
அழுக் குழந்தையாய் தவழ்கிறேன்...!