ஊர் சுற்று புராணம்

பயணம் ஒரு அற்புதமான அனுபவம், அதுவும் ஜன்னல் ஓர இருக்கை என்றால் மனம் றெக்கை கட்டி பறக்கும். மனதிற்கு பிடித்ததை அசை போட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பது. மனம் காயம்பட்ட நினைவுகளை எண்ணி விழி புலம்பி நனையும் போது ஆறுதலாய் நான் இருக்கேன் என்று, என்னை வருடி என் கண்ணீரை துடைத்து செல்லும் தென்றல் காற்றும். பிடித்த பாடலை கேட்டு கொண்டு, தளத்திற்கு ஏற்றவாறு தலை அசைத்து. பாடலை சத்தமில்லாமல் முணுமுணுக்கும் உதட்டை கடிந்து அமைதி ஆக்குவதும். சிரிப்பது, அழுவது, பின்பு நெகிழ்ந்து என்னை மறப்பது. என் வாழ்வை அழகாக்கும் பயணம் மீதம் உள்ள நாளை சுவையார்க்கும்.