ஆன்ம சாஸ்திரம்

உன் கயல் விழி தீண்டியதில்
என் இருபத்தி நான்கு விலா எலும்புகளில்
சில காணவில்லை..
பல கரைந்து விட்டன!

என்னால் களவு கொண்ட
உன் விழிகளை
மீட்க - என் இதயம்
வசப்பட்டது!

விலா எலும்பின்
துளைகளில் தப்பி வந்த
என் மனதோ!
பிராணவாய்வாக - உன் நுரையீரலில்
நுழைந்து..
இரண்டர கலந்தது,
இனி..
இது போதும்
இச்ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்!

இனி என் கல்லறையில்
உனக்காக காத்திருப்பேன்!
நீ விட்டுச் செல்லும்
ஓர் துளி கண்ணீரில்
உயிர்த்தெழுவேனோ!
இல்லை..
விம்மி விசும்பி
மீண்டும் மடிவேனோ?

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (9-Dec-17, 12:12 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : aanma saashthiram
பார்வை : 104

மேலே