அழியாத நினைவுகள்

இன்றோடு ஒரு வருடம் ஓடி விட்டது . ஆனால் இன்னும் அவள் முகவும் , நினைவுகளும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றது .

கல்லூரியின் முதல் நாள் தேவதையை போல் வெள்ள நிற சுரிதாரில் வந்த அவள் முதல் பார்வையிலேயே மனதை பறித்துவிட்டாள். ஆனால் எதோ ஒரு ஆணவம் என்னை அவளிடம் செல்ல விடாமல் தடுத்தது.

அன்றைக்கு நவம்பர் 2 நண்பர்களிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தேன் .

" ஹாய் , அருண் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு ரொம்ப நாளா நினைக்கிறேன் ."
" என்ன சொல்லு ? எனக்கு நிறைய வேலை இருக்கு ."

" அது... அருண் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு . ஹ்ம்ம் " என்று இழுத்தாள்.
மனதில் ஓராயிரம் பட்டாம்பூச்சி பறந்தது போல் தோன்றியது . ஆனால் அதை வெளி காட்டாமல் சற்று விளையாடலாம் என்று நினைத்தேன் .
" இங்க பாரு மாயா நீ என்ன படிக்க வந்திய இல்ல காதலிக்க வந்திய . இந்த மாதிரி எண்ணத்தோட என்கூட பழகாதே . எனக்கு இதெல்லாம் புடிக்காது . "
அவள் முகம் சிவந்தது கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் துளிகள் அழகான கன்னத்தை வருடி கீழே விழுந்தன.

நாட்கள் நகர்ந்தன !.
அவளின் ஏக்கம் கலந்த பார்வை என் மனதை கலங்க செய்து கொண்டே இருந்தது .

கல்லூரியின் கடைசி நாள் .

இன்று அவளிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செயதேன் . இது தான் நான் எதிர்பார்த்த தருணம்.

வகுப்புகள் கிடையாததால் எல்லாரும் அங்கும் இங்கும் கூடி நின்று பேசி கொண்டிருந்தனர்.
சிலரின் முகம் சோகமாக காட்சிதந்தது. இருக்கும் கல்லூரி என்ற பூங்காவை விட்டு வெளியே செல்கிறோம் . வெளி உலகத்தை எப்படி எதிர்கொள்வோம் என்கிற கவலை , நண்பர்களை பிரிகிறோம் என்கிற கவலை .
"மாயா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ."
" சொல்லு அருண் " என்று எதிர்பார்ப்புடன் என் கிட்ட வந்தாள் .
எப்படி எல்லாமோ சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்திருந்தேன் . ஆனால் வார்த்தைகள் வெளி வரவில்லை . ஒரு நிமிஷம் ஏதேதோ யோசனைகள் கண் முன் வந்து போனது .
" Evening பீச் வரியா .?"
" பீச் ? "
" கொஞ்சம் பேசணும் பர்சனல் லா ,!"
" hmmm ok ! Time ,?"
" 5 o கிளாக் "
" சரி "
ஆனா அது என் பிளானிங்லேயே இல்லையே . என்று யோசித்தேன் .
மாலை நேரம் ,அலைகளின் ஓசை , உப்பு காற்று , என்று கவிஞனின் கற்பனைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலை இருந்தது .
இன்று இப்போதைய விட அழகாக தெரிந்தாள் மாயா.
" வந்து ஒரு மணி நேரம் ஆச்சு .இன்னும் பேசாம இருக்க . நான் வீட்டுக்கு போகணும். டைம் ஆச்சு ."
என்றாள் சற்று அதட்டலாக .
அதுக்குள்ளயா ஒரு மணி நேரம் ஓடியது என்று சிந்தனையில் இருந்து உணர்ந்தேன்.
" மாயா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?."
" புரியல "
ஒன்னும் தெரியாதவள் போல் கேட்டாள் .
" இப்போ இல்ல ஒரு வேலை தேடணும் . கிடைச்சதும் பண்ணிக்கலாம் . ஓகே வா ."
" அப்போ நான் கேட்டதும் வேணாம்னு சொன்ன ! இப்போ மட்டும் என்ன திடிர்னு ?"
என்று கிண்டலா கேட்டாள் .
" உன்ன முதல் நாள் பார்த்ததுமே புடிச்சிருந்துச்சு . ஆனா எதோ .. ஈகோனு வச்சுக்கோ அதான் ரொம்ப பிகு பண்ணிட்டேன் . "
" ஹ்ம்ம் ஓகே ஓகே . பண்ணிக்கலாம் . "
தொலைபேசி ஒலித்தது . எடுத்து
" வரேன்மா " என்று சொல்லி வைத்தாள் .
" நான் கிளம்புறேன் .கால் பண்ணு "
என்று சிரிப்புடன் தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினாள்.
மனதில் ஒருவிதமான புது சந்தோசம் வந்தது . துள்ளி குத்திக்கணும்னு தோன்றிற்று.
பார்க்கிங்கில் போய் காரை எடுத்து கிளம்பினேன் . சற்று தூரம் சென்றதும். எதோ ஆக்சிடென்ட் என்று தோன்றியது. கூட்டமாக நின்று பார்த்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தை தள்ளி பார்த்த என் இதயம் நுருங்கியது.

அது எனது மாயா !!!!!
************************************
டிரைவர் கூப்பிட்டார் சார் சொன்ன இடம் வந்தாச்சு . ஓ வந்தாச்சா . என்று நினைவுகளில் இருந்து எழுந்தேன்.

கையில் ரோஜா பூ பொக்கையுடன் எனது மாயா தூங்கும் கல்லறையை நோக்கி நடந்தேன் . அங்கு யாரோ ஒருவர் கல்லறை முன் நின்று கொண்டிருந்தார்.

அருகில் போனதும் ," நரேஷ் நீ ஏன் இங்கே .? "
என்று ஆச்சர்யமாய் கேட்ட நான் யோசிக்க அரும்பிச்சால் ,மாயாகிட்ட ஒரு தடவைகூட அவன் பேசி பார்த்ததே இல்ல இப்போ அவ கால்லறையில????
.
" என்ன மன்னிச்சிடுடா அருண் . " என்று கட்டி பிடித்து அழுதான் .
" என்னாச்சு டா " என்று வினவினேன் .
" என்னால தான் உன் மாயா , நான் தான் , தெரியாம இடிச்சிட்டேன் . வேண்டிய நிப்பாட்டி பார்க்கிற தைரியவும் வரல . எப்படியாச்சும் தப்பிக்கணும்னு நினைச்சேன் . அப்போ தெரியாது அது மாயானு . அப்புறம் தான் தெரிய வந்திச்சு . குற்ற உணர்ச்சி ஒவொரு நிமிஷமும் என்ன கொல்லுது . நீ என்ன சொன்னாலும் நான் கேக்கிறேண்டா . போலீஸ்கிட்ட சரணடையவும் தயாரா இருக்கிறேன்டா" .

அவனிடம் என்ன சொல்றதுன்னே தெரில .

" என் மாயா போயிட்ட . உனக்கு என்ன தண்டனை கிடைச்சாலும் அவ திரும்பி வரமாட்டா . உன்னோட குற்ற உணர்ச்சியை உனக்கான பெரிய தண்டனை நரேஷ் . " என்று சொல்லி பொக்கையே வைத்து கிளம்பினேன்.

நான் பெரிய தியாகியோ , மன்னிக்க தெரிஞ்சவனோ இல்லை . ஆனா மனதில் அப்போது அப்படி பேச தோன்றியது . ஒரு வேளை மாயா வோட விருப்பம் அதுவா இருக்கோமோ .?

எழுதியவர் : (9-Dec-17, 12:22 pm)
Tanglish : aliyatha ninaivukal
பார்வை : 218

மேலே