எழுந்து வா நண்பனே

உன் துன்பம் இருள் போல் விலகும்
உன் வாழ்க்கை நிச்சயம் ஒளிரும்
இருளை விட்டு வெளிச்சத்திற்கு வா
இயற்கை எனும் இன்பத்தை ரசி
பரந்த வானம் அதில் எத்தனை
நட்சத்திரம்
வானுக்கே ராணி என்று ஆட்சி
செய்யும் நிலவு
பெண்ணின் கருங்கூந்தல் போல்
மேகம்
பெண்ணின் முகப் பருக்கள் போல்
புல்லில் பனித்துளிகள்
பூமியை குளிரச் செய்யும்
மழைத்துளிகள்
வைகறையை வரவேற்கும் சூரியன்
இவற்றையெல்லாம் ரசிக்காமல்
மூளையில் முடங்கி கிடப்பது ஏன்
எழுந்து வா நண்பா
இருளை விட்டு வெளிவரத்துடிக்கும்
சூரியன் போல்
நிச்சயம் உன் வாழ்க்கை ஒளிரும்..!

எழுதியவர் : சேக் உதுமான் (9-Dec-17, 1:06 pm)
பார்வை : 430

மேலே