கள்வன் நான்
உன் இதயத்தை திருடியதால்
உன் கண்களால்
என்னை கைது செய்வாயா
உன்னை திருடியதால்
என்னை தண்டிப்பாயா!
திருடிய குற்றத்திற்காக
முத்தங்களால் வன்முறை செய்வாயா! இல்லை
கட்டியணைத்து காதல் செய்வாயா!
பூப்போன்ற உன் மனக்கூண்டில்
ஆயுள் கைதியாய் சிறையிலடைப்பாயா..!