காவியங்கள் கூறுவதும் காட்சியின்று ​

​பாவையவள் பார்வையோ மண்மீது
--​பாதங்கள் பதிந்திட்ட பாதைமீது !
காத்திருக்கும் காரிகையின் காட்சி
--பூத்திருக்கும் விழிகளே சாட்சி !

மங்கைக்குத் துணையிருந்த ஆதவன்
--மறைகின்ற நொடிவரை காவலன் !
மனந்தளரா கன்னியவள் மனதில்தான்
--மன்னனின் வருகையும் மையம்தான் !

செவ்வானம் ஆனதால் விண்ணதுவும்
--செவ்விதழ் ஆனதோ பெண்ணிதழும் !
அலங்கரித்த சிலையும் அமைதியாக
--அமர்ந்துள்ள நிலையும் அழகாக !

திறந்தவெளி மணற்பரப்பு சிறையானது
--பரந்தவெளி காத்தல் தண்டனையானது !
காதலில் அனுபவங்கள் கசக்காதென்று
--காவியங்கள் கூறுவதும் காட்சியின்று !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Dec-17, 7:34 am)
பார்வை : 75

மேலே