அளவே இல்லை
காலை பூவாய்
என்னை பரிக்கிறாய்
நூலை கொண்டு
என்னை கோர்க்கிறாய்
உன் கூந்தலில்
நானும் பூவோடு பறக்கும்
காட்சியை காண நிற்கிறேன்
நீயோ கட்டிய பூவை
கடவுள் படத்தில் சூடி
கடவுளோடு
என்னையும் சுற்றுகிறாய்
உன் கடவுள் பக்திக்கு
அளவே இல்லை

