தொடங்கி வைப்பவர் -- கவியரங்கம்

தொடங்கி வைப்பவர் :-

காஞ்சிநகர் போற்றுகின்ற கல்விச்சாலை தன்னில்
------- காசினியும் புகழ்பெறவே தமிழைக் கற்றே
பூஞ்சோலை ரசிக்கின்ற கவியும் பாட
-------- பூமகளை அழைக்கின்றேன் தொடக்கி வைக்க !

கவிஞர் மஞ்சுளா ரமேஷ் அவர்களே ! வருக ! கவியரங்கத்தை தொடங்கி வைக்க ! இவரோ முறையாகத் தமிழ் பயின்ற தமிழாசிரியர் என்பது மேலும் அரங்கத்திற்குப் பெருமை சேர்க்கின்றது .. வாருங்கள் கவிஞரே !

முன்னிலை :-

ஆம்பூரில் வாழ்கின்ற அன்பின் ஊற்றே
-------- அழகாக வடிவமைக்கும் தன்மை யோடு
மேம்பாடு கொண்டதொரு உள்ளம் தன்னில்
------- மேதினியை ஆளுகின்ற சான்றோன் நீரே !
சோம்பல்தான் உனக்கில்லை பணியும் செய்ய
-------- சொல்லோடு விளையாடும் உன்றன் பாடல்
ஓம்புகின்ற முன்னிலையை வகித்த தாலே
-------- ஒலிக்கட்டும் கவிதையுமே அனைவர் முன்னே !

கவிஞர் . பிரபு வாய்ஸ் அவர்கள் , ஊ ல ழ ள - கவிதைகளின் சரணாலயம் குழுமத்தின் தலைசிறந்த நிறுவனர் . நம் நிலாமுற்றத்தின் நூறாவது கவியங்க சான்றிதழ்கள் முழுவதையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது . எங்கள் குழுமத்தின் பங்களிப்பாக நூறு கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் சான்றிதழ் வழங்க இருக்கின்றோம் . இத்துனை சிறப்பிற்குரிய சகோதரர் , கவிஞர் . பிரபு வாய்ஸ் அவர்களை கவியரங்கத்திற்கு முன்னிலை வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .வாருங்கள் கவிஞரே . உங்கள் பாராட்டுகளும் கைத்தட்டல்களும் அரங்கம் அதிரட்டும் .

உடன்பிறந்த சகோதரி தொடங்கி வைக்க
------- உடன்பிறவாச் சகோதரர் முன்னிலை வகிக்க
கடல்போன்ற கவிஞர்கள் ஒன்று கூட
-------- கவிதைகளோ உறவாகி நம்முள் நிற்க
திடல்களாக மாற்றமின்றி அமர்ந்த கோலம்
-------- திக்கெட்டும் புகழ்பரப்பும் உறவின் பாலம்
மடல்களுமே வேண்டாமே மனத்தில் ஒன்றாய்
------- மாறியதால் களைகட்டும் மூன்றாம் அமரவே !!

தாய் :-

#தாயினும் சிறந்த கோவிலும் உண்டோ ! அம்மா என்ற சொல்லில் தான் அகிலம் முழுதும் அடங்கி விடும் . பறை சாற்ற வருகிறார் ------

#உதிரத்தை உணவாக்கித் தந்தவளை உறவுகளை உணர்வாக்கித் தந்தவளை , போற்றுகின்ற வகைதனிலே கவிதை பாட வருகிறார் -------

#அன்பும் பண்பும் புகட்டியவள் ! அன்னை உன்னை மறவா தென்றும் நானிருக்க உறவாய் உயிராய் வேண்டும் என்று கவிதை பாட வருகிறார் ---

#அன்னை உன்னை வணங்குவதில் அகமும் முகமும் மலர்கின்றேன் . என்னைப் பெற்றத் தாயன்றோ ! எதிலும் உனக்கும் நிகருண்டோ என்று கவி பாட வருகிறார் --

தந்தை :-

#பிள்ளைக்கு தோள் கொடுக்கும் துணையாகும் தந்தைக்கு மகுடம் சூட்ட வருகிறார் --------

#கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு அறிவுப் பால் ஊட்டி இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் தந்தையே பாசத்தில் விஞ்சி நிற்பவர் என்று பாட வருகிறார் -----

#ஊர்போற்றும் வகைதனிலே உலகாளும் வகைதனிலே வளர்க்கின்ற தந்தையின் பாசத்தை எடுத்தியம்ப வருகிறார் கவிஞர் -------- .

#ஆதியாக அந்தமாக ஆளுகின்ற தந்தையின் பெருமைகளை கவி பாட வருகிறார் கவிஞர் ------

#பாசத்தில் நிகர் தந்தைக்கு நிகர் தந்தை தான் என்று உறுதியாக கவி பாட வருகின்றார் கவிஞர் -------.

மகன் :-

#தாயோடு தந்தையையும் தரணிதனில் பேணுகின்ற மகனின் பாசமே விஞ்சி நிற்பது என்கிறார் -------

மகனின் பாசத்தால் முதியோர் இல்லங்கள் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றன என்று கவி பாட வருகிறார் -------

#மாசற்ற பண்பாலே பாசத்தால் அரவணைக்கும் மகனின் அன்பிற்கும் ஈடுயிணை உண்டோ என்று கவி பாட வருகிறார் ------

#முத்துப்போல் பிள்ளை குடும்பத்தின் சொத்தாவார் என்கிறார் நம் கவிஞர் --------

#மலரட்டும் மனிதநேயம் ! மணம் பெறட்டும் மகனின் பாசம் என்று கவி பாட வருகிறார் ------

மகள் :-

#அன்னைக்கும் அன்னையாவாள் ! அன்பிலே ஆளுகின்ற சக்தியாவாள் என்று கவி பாட வருகின்றார் கவிஞர் ----

#பாசத்தில் விஞ்சி நிற்பவர் மகளே என்று தம் கருத்தை கவிதையாக்கித் தருகின்றார் கவிஞர் -----

#வாராது வந்த செல்வமாய் , வளர்பிறையாய் அன்னைக்கும் தந்தைக்கும் ஆதியாக அன்பினால் போற்றும் மகளஅன்றோ பாசத்தில் விஞ்சி நிற்பவர் என்கின்றார் கவிஞர் ------

#மகளென்ற பிறப்பொன்ற மங்கையரை , தந்தையரை காக்கின்ற பிறப்பென்று அறுதியிட்டு உறுதியாக தம் கவியில் நிலை நாட்ட அழைக்கின்றேன் கவிஞர் ----- அவர்களை .

#மலைமலையாய் செல்வங்கள் இருந்தாலும் மகள் என்ற செல்வம் இருந்து விட்டால் மன்கையாராய் பிறந்ததற்கு முழுமையான பலன் கிட்டும் என்கிறார் கவிஞர் -------

உடன் பிறப்பு :-

#உடன்பிறப்பின் பாசமோ உலகாளும் பாசமன்றோ . உன்னதமான உடன்பிறப்பு அமைந்து விட்டால் உறவுகள் எல்லோரும் நம்முடனே என்கிறார் கவிஞர் ------

#அண்ணனுடன் தம்பிகளும் , ஆக்காவுடன் தங்கையும் ஒன்றிணைந்த உறவுகள் பாசத்தால் பிணைக்கப் பட்ட பந்தங்கள் என்று கவி பாட வருகிறார் --------

#குடும்பத்தின் கொண்டாட்டம் உடன்பிறப்பினால் தான் உருவாகிறது . பாசத்தில் விஞ்சி நிற்பவர் உடன்பிறப்பே என்று கவி பாட அழைக்கின்றேன் கவிஞர் -------

#தாயிடமும் தந்தையிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் நட்பன்றோ உடன் பிறப்புகள் என்று பாட வருகின்றார் கவிஞர் -------

#மாமனும் மச்சானும் உறவாடும் குடும்பத்தில் பாசத்தால் விஞ்சி நிற்பவர் உடன்பிறப்புகளே என்று பாட வருகின்றார் கவிஞர் --------.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Dec-17, 11:35 am)
பார்வை : 71

மேலே