இளமைக்கு உறுதி

உனக்கு நீதான் ராஜா
உன்னைப் பொருத்தவரை
யாருக்கும் தூக்காதே
கூஜா பொறு தவறை..

உன்னைத் தூக்கியெறிந்து
வெறுத்தவரை
மீண்டும் மீண்டும்
கெஞ்சாதே
வெறு தவறை...

உன்னை ஊக்குவிக்க
நான்கு பேர் உள்ளவரை
எப்பொழுதும்
உறுதியாக இருக்கட்டும்
உன் உள்ளவறை...

கள்ளப்பணமுள்ளவன்
ஏழைக்கு இரப்பதில்லை
நல்லமனமுள்ளவன்
ஏழ்மைக்கு இறப்பதில்லை...

மாயையில் ஆழ்ந்து வாடாதே
உன்னுள் ஓடுவது
இளமைக்குருதி
மனம் மயங்கி யாருக்கும்
பணியாதே கிடைக்காது
உன் இளமைக்கு உறுதி..

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (12-Dec-17, 1:50 pm)
Tanglish : ilamaikku uruthi
பார்வை : 105

மேலே