ஒட்டிக்கொண்டேன்

என் மனம்
முழுவதும் நீ

குளத்தில் மூழ்கிய
ஒரு தாமரையாய்
என் மனம்
உனக்குள் தனைமறந்து
மூழ்கி கிடக்கிறது

என் மூச்சு
முழுவதும் உன்
மூச்சு காற்றே
வியாபித்துக் கிடக்கிறது

உன் நினைவுகள்
என்னை தீண்டும்
பொழுதுகள் எல்லாம்
என் தேகம்
ஏனோ சில்லிடுகிறது

உன் குரல்
மெதுமெதுவாய்
எனக்குள் இறங்கி
அது ்இசைக்கும்
இசையை இதுநாள்வரை
இதயம் கேட்டதேயில்லை

ஆயிரம் ஆயிரம்
பூக்களின் வாசனையை
ஒரு நொடியிலே
எனக்குள் வீசிச்
செல்கிறது உன்
சிரிப்பின் சுகந்தம்

உன் வாசனையை
ஒளித்துக் கொள்கிறேன்
எனக்குள்
என் யோசனையை
விரட்டி விடுகிறேன்
என்னை விட்டு


உன் நேசத்தை
நிழல்போல தொடர்ந்து
வந்து உன்னில்
ஒட்டிக்கொண்டேன்

உன் பாசத்தில்
சிறுகுழந்தையென மாறி
சிணுங்க தொடங்குகிறேன்

உன் உருவில்
ஒரு தாயைக்
காண தொடங்குகிறது
என் கண்கள்

நேசத்தின் ஊஞ்சலில்
ஆசைகள்
ஆட தொடங்குதே

எழுதியவர் : யாழினி வளன் (12-Dec-17, 11:28 pm)
பார்வை : 94

மேலே