எனக்கெந்த தண்டனை தருவாயோ
உன் காதல் வலையில் விழுந்துவிட்ட
களவானி நான்தானே!
மனம் உனதை திருட வந்து
மாட்டிக் கொண்டு நிற்கின்றேனே!
களவு செய்ய வந்த என்னை,
கண்கள் உனது கைது செய்ய,
பாசம் என்ற சிறையில் தள்ளி,
பரிதவிக்க விட்டாய் பெண்ணே.
உன் அன்பு எனும் சட்டத்தால்,
என்னை ஆயுள்கைதி ஆக்கியவளே,
இப்போது திருமணம் எனும் நீதிமன்றத்தில்,
நான் கருணைமனு கொடுத்து காத்திருக்கின்றேன்.
உன்னால் வாழ்க்கை எனும்,
குற்றவாளி கூண்டில் நிற்கும் எனக்கு,
தாலிக்கயிறு கொடுத்து என் தாரமாவாயா?
இல்லை,
தூக்குகயிறு கொண்டு தூக்கில் இடுவாயா?
தீர்ப்பு உன் கையில் .....