நிலாப்பயணம்

நான் ஏறும் நிறுத்தத்திலிருந்து
மூன்றாவது பேருந்து
நிறுத்தத்தில்தான் ஏறுவாய் நீ
அதற்கு முன்னரே இருக்கைகள்
நிரம்பிவிடும்
படிக்கட்டின் அருகே இருக்கும்
கம்பிதான் நீ நிற்கும் இடம்
புத்தகப்பையை முதுகும்
நோட்டுப் புத்தகங்களை மார்பும்
தாங்கிக்கொண்டிருக்கும்.
மாநகரப் பேருந்து அழகாகும்
ஒரு பூந்தோட்டத்தில் இருப்பதாய் உணரத் தோன்றும்
நேர்வகிடும் பிறைநுதல்
நெற்றியும் வில் புருவமும்
ஆப்பிள் கன்னமும்
செவ்வாய் இதழும் சங்கு கழுத்தும் மெல்லிய இடையும்
உடை சூடிய அழகும் இளமையின் வனப்பும் எளிதாய்
மயங்கிடச் செய்யுதே காதல்
விதையை தூவுதே மனதை
கொடுத்திட தோணுதே!வாழ்வே
நீதானென விழைந்திட மனம்
ஏங்குதே!பூங்கொடியே!தளிர்மலரே! நீ இறங்கியதும்
ஓலமிடும் சப்தம் கேட்டாலும்
நிலவோடு பயணித்த
பிரமிப்பை உண்டாக்கி போவதேனோ?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (13-Dec-17, 2:16 pm)
Tanglish : perunthil or nilavu
பார்வை : 113

மேலே