முத்தம் வேண்டும்
அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.
புன்னகை பூ பூக்கும்
பூந்தோட்டம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வண்டாக நான்.
இன்னிசை தரும் வீணை
உன் இதழ்கள்,
இதழ் மேவும் கலைஞாக நான்.
நம் காதல் யுத்தத்தில்
இதழ்களே போர்க்களம்,
முத்தங்களே ஆயுதம்.
உயிர் உணர்ந்த தருணம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காதல் சொன்ன முதல் நொடியும்,
நீ கொடுத்த முதல் முத்தமும்.
எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பையும்,
உன் நினைவுகளே முத்தமிடுகின்றது.