என் வாழ்க்கை-2

இரு தேகங்களின்
தேநிலவில்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற
ஏமாற்றங்களை சுமந்துக்கொண்டு
பிறக்கத் தொடங்கியது
என் வாழ்க்கை...!,

இமையில்லா என் கண்களில்
எத்தனையோ கனவுகளைக் கொண்டு
கண்விழித்துக் கொண்டிருக்கிறேன்!,

இமையில் இருக்கும் கனவுகளே
இன்றியமையாத போது
இமையில்லாமல் இருக்கும்
கனவுகள் மட்டும்
எப்படி நிறைவேறும்?!,

ஆசைகளை வெறுக்க
கற்றுக்கொண்டேன்!
அதனுடனே
அவமானங்களை சுமக்க
கற்றுக்கொண்டேன்!!,

உறவுகளை நேசிக்க
கற்றுக்கொண்டேன்!
அதனுடனே
உணர்வுகளை ஊமையாக்க
கற்றுக்கொண்டேன்!!,


ஏனையங்கள் பேசுவதை
ஏற்றுக்கொண்டேன்!
அதனுடனே
ஏகாந்தங்களில்
என்னை எரிக்க கற்றுக்கொண்டேன்!!,

பாமரனாக பிறந்தவன்
பகுத்தறிவை பெற
கற்றுக்கொண்டேன்!,
அதனுடனே
பிறப்பை வெறுத்த நாள்முதல்
வளர்ச்சியை கற்றுக்கொண்டேன்!!,

உள்ளமும் உழைப்பும்
ஊணமாக இருக்கும் போது
உயிர் அது
வளர்ச்சி அடைந்தது!
வளராத வாழ்க்கை தரத்தில்
உடல் வளர்வதை
தடுக்க முடியாமல்
தடுமாறி கிடக்கிறேன்!!,

சிந்தனைகள் என்னிடம்
பல உண்டு
அதனை எண்ணி
நான் சிதைவுண்டு
சிதறி கிடக்கும் போது!
சேர்த்து வைக்க யாருமின்றி
சேராக கலங்கி கிடக்கிறேன்!!,

கலங்கிய சேரும்
சில காலங்களில்
காணலாக மாறும்!
அப்போதும்
என் கண்ணீர் அதனுடன் சேரும்!!,

வாழ்க்கை என்ற ஒன்றை
இடைவிடாமல்
வெறுத்துக்கொண்டிருக்கும் போது
தெரிகின்றது!
நேசம் என்ற ஒன்று
என் நெஞ்சில் இல்லையென்று!!,

உலகின் எண்ணங்களை
நேசிக்கத் தெரிந்தவனுக்கு
என்னை நேசிக்க தெரியாமல்
போய்விட்டது!,

வழியது செல்லும்
பயணங்கள் எல்லாம்
வலியில் முடிகின்றது!,

எதிர்பார்த்து செல்லும்
எதார்த்தங்கள் எல்லாம்
ஏமாற்றமாக முடிகிறது!,

தொடக்கம் என்பது
தொடரும் முன்னே
அவமானங்கள் அதனை
அடக்கம் செய்வதை
யாரிடம் சென்று
சொல்ல முடியும்?!,

ஆடம்பறங்களின் மத்தியில்
அத்தியாவசியங்களை கேட்பவனிடம்
அன்பு இருந்து
என்ன பயன்?!
ஆறுதல் இருந்து
என்ன பயன்?!
என்னை மட்டுமே அறிந்த
என் மனம்
யாரிடம் சென்று இதனை சொல்லும்?!,

கருப்பு நிறம் கொண்ட
இரவுகளில் தான்
சில இரகசியங்கள் கண்ணீரில்
வழியத் தொடங்கியது!,

வெள்ளை நிற பகலில்
சில வேடிக்கைகள்
என்னை
வேட்டையாடத் தொடங்கியது!,

உயிர் என்னை மறுத்து
உடல் நடைபிணமாக
நடக்கத் தொடங்கியது!
அதனுடனே
இந்த உலகம் நகைக்கத் தொடங்கியது!!,

உயிர் சுவையே
உதரி விட்டு சென்ற பின்பு
உலகத்தின் சுவையை நான் ஏன்
உணர வேண்டும்?!,

வண்ண காகிதங்கள் சில
என் எண்ணங்களை
மாற்றி அமைத்தது!
அது காட்சியாக இருந்தும் கசியும்
கண்ணீரை இழக்கத் தொடங்கியது!!,

"காம்பின் முனையில் பூத்த"
மலரொன்று
கடவுளிடமும் சேராமல்
கல்லறையிலும் சேராமல்
கடக்கும் வழியே
காய்ந்து போனது!
அது சில இதங்களை
கவரத் தொடங்கியது!!,

சுவாசமும் நீங்கி
வாசமும் நீங்கி
நீறின்றி நீராவியாக
நீடித்து செல்லும் போது!
சில நெஞ்சங்கள்
அதனை நேசிக்க தொடங்குகின்றது!!,


கனவுகளில் மிதக்கும்
இளமை காலங்களில்
காயங்களை கடந்து வருகின்றேன்!,

இச்சைகளை வெறுத்து
புத்தனாக மாற முயற்சித்தேன்!
ஆனால்
இதயம் சிலவற்றை விரும்புகிறது!!
வலியென்று தெரிந்தும்
அதை ஏற்பதை
வழக்கமாகக் கொண்டது!!!,

பாடல்கள் பல உண்டு
பழமொழிகள் ஆயிரம் உண்டு
ஆயினும் அதனை
அனுபவிக்க ஆண்மகன் எனக்கு
பொறுமை இல்லை!,

நிகழ் காலத்தின்
நிழலே என்னை
தீக்குழம்பாகத் தீண்டி இருக்க!
எதிர் காலத்தை என்னால்
யோசிக்க முடியாமல் போகின்றது!!,

அதிகாலை எழுந்து
அந்தி மாலை விழுவது வரை
நாட்களே எனக்கு
சோதனையாக இருக்கும் போது!
சாதனைகளை நான் எங்கு தேடுவது?!,

வாழும் நாட்களிலேயே
வருந்தி தவிக்கும் போது
வாழப் போகும் நாட்களை என்னால்
விரும்பி ஏற்க முடியவில்லை!,

"வருடம் தோறும் முதல் நாள்"
உலகில் உதித்த நாள் -- அது
உதித்ததை எண்ணி எண்ணி
என் உள்ளம்
உருகி தவிக்கும் நாள்!!,

வாழ்த்துக்கள் ஆயிரம்
என் வாசலை வந்து சேரும்!
ஆனால் அதுயாவும்
என் இதய வாசலை வந்து சேராது!!,


வாழ்வின் முதல் பொழுதையே
மூடி வைப்பதால்!
முப்பொழுதையும்
திறத்து வைக்க மனமின்றி
முடங்கி கிடக்கிறது!!,


பொதுவாக எப்போதும்
சிந்திக்க தெரிந்தவனுக்கு
மெதுவாக சிரிக்க தெரியாமல்
சிறகுகள் இன்றி
சிறைபட்டுகிட்கிறேன்!,

வறுமைக்கு நிறம் கண்டவன்
எதற்காக என் வாழ்கையை
காணமல் சென்றான்?!
கண்டிருந்தால் அவனும்
கற்றுக் கொண்டிருப்பான்!
நித்தம் மாறும் மாற்றம்
இங்கு
நிறந்தரமாக மாறாது என்று!!,

"சதை என்று நினைத்த
என் இதயம்"
இதனை
சகிக்கும் என்றும் தெரியவில்லை!
அதுவே
என்னை சாகடிக்கும் என்றும்
தெரியவில்லை!!,


அன்பு முதல்
ஆசை வரை
இன்பம் முதல்
இதயம் வரை
கண்கள் முதல்
காதல் வரை
உடல் முதல்
உயிர் வரை
எண்ணம் முதல்
எதார்த்தம் வரை எல்லாம்
என்னை மறுத்தும்!
அதையெல்லாம் நான் வெறுத்தும்!!
ஏதோ ஒன்று என்னை
வாழ்வின் எல்லைவரை
அழைத்து செல்கிறது!!!,

எதுவான போதும்
இன்னும்
ஏமாற்றங்களை சந்திக்க
எதிர் காலம் இருக்க...!
என்றும் நம்பிக்கையாக
என் நட்பு இருக்க...!!
நகர்ந்து செல்கிறது
என் வாழ்க்கை...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Dec-17, 7:19 pm)
பார்வை : 292

மேலே