நன்றியுள்ள நாய்

நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட நாயே!
நாசமா பொயிருவ.
என்று திட்டிக் கொண்டே கடந்து போனார் அந்த பெரியவர்.

அது என்ன? நாய்ன்னா கேவலமா?
எப்ப பார்த்தாலும் இந்த மனிஷ பய நாய் நாய்னு திட்டுறான்.
என்றே அலுப்புத் தட்டிக் கொண்டது நான் வளர்த்த நாய்..

ஏன்பா? அவர் இப்ப என்ன சொல்லிட்டாருனு நீ கோபப்படுற,
என்றேன் நான்.

கொள்ளையடிக்கும் கூட்டமென்றால் அது உங்க மனிஷக் கூட்டம் தான் பா.
கொஞ்சம் கூட இயற்கையிடம் நன்றி இல்லாத பயலுக,
என்றது நாய்.

அடேய்! நீ நான் போடுற சோத்துக்கு வாலாட்டுற,
இப்போ அறிவில் சிறந்த எங்க மனிதக் கூட்டத்தையே திட்டுறீயா?
நன்றி மறந்த நாயே! என்றேன் நான் கோபமாக.

ஹாஹா, நன்றி மறந்த நாய்! ஆம். நீ போடுற பழைய சொத்தைத் தின்னுட்டு வெயிலிலும் மழையிலிலும் குளிரிலும் வாடிக் கொண்டு, உன்னைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டுத் துள்ளிக் குதிக்கிறோமே! அதுக்கு இது தேவை தான்.
வால் இருப்பதால் வாலாட்டவில்லை.
நன்றி இருப்பதால் வாலாட்டுகிறோம்.
ஆனால், வாலே இல்லாமல் பதவியால், பணத்தால், அதிகார வெறியால் வாலாட்டும் உங்களுக்கு நன்றி இல்ல. அன்பு இல்ல.
என்றது நாய் பன்மடங்கு கோபமாக.

நன்றி கெட்ட நாய்னு சொன்னது தப்புத் தான்டா சாமி. என்றேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Dec-17, 11:48 pm)
பார்வை : 6379

மேலே