ஒரு பெற்றோரின் விருப்பம்
ஐபோன் அலைபேசி உண்டு
அழைத்து பேச ஆள் இல்லை,
120 cms LED தொலைக்காட்சி உண்டு,
வேலையில்
தொலைந்து போன மகன் மட்டும்
அதில் தெரியவில்லை ,
சென்ட்ரலைஸ்ட் AC உண்டு
மனம் மட்டும் இன்னும் குளிரவில்லை ,
மாடுலார் கிட்சென் உண்டு
சமைத்தால் உண்பதற்கு
மகள் இல்லை,
தோப்பும் தோட்டமும்
நெறைய உண்டு
கொய்யா காய் பறித்து கொடுக்க
பேரனும் பேதியும்
பேஸ்புக்கில் மட்டுமே உள்ளனர்,
பெரிய வீடு உண்டு
அமைதி மட்டுமே
குடி இருகின்றது ,
வாசல் அரட்டைகள் எல்லாம்
வாட்சப் வாய்ஸ் நோட்கள் ஆகி விட,
தேடுகிறேன் என் மகனின் குரலை,
வேலைகரானும் வேலைகாரியும்
எங்களை தத்தெடுக்க
மாதம் 10000 ருபாய்
பாசத்தின் விலை இன்று தெரிந்தது.
வாழ்கை வாழ பணம் தேடி சென்றவன்
இன்று பணம் தேடுவதையே
வாழ்க்கையாய் மாற்றி கொண்டான்,
பணம் தேடி சென்ற மகனே!
எங்கள் பிணம் பார்க்கவாவது போனில் இன்றி
நேரில் வருவாயா.?