கண்கள் பேசும்
காதலை முதலில்
பரிமாற்றம் செய்வது கண்களே!
சூரிய கதிர் போன்ற
பார்வை
அவளின் பார்வை
பட்டதும்
காதல் பூவாக மலர்ந்தேன் நான் !
மின்னல் கீற்றுகள்
அவளின் சுடர்விழி
என்னுள் பாய்ந்ததும்
காதல் நரம்புகள் வெடித்தன!
காந்த துருவங்கள்
அவளின் புருவங்கள்
என் இரும்பு இதயத்தை
சுண்டி இழுக்கிறது!
பேச மறுக்கிறது
என் உதடு! அவள் அறிமுகம் இல்லாதவளென்று!
போக துடிக்கிறது
என் இதயம்! காய படுத்திவிடுவாளோயென்று
எதற்கும் கலங்கவில்லை
என் கண்கள்
ஓரமாய் ஒளிந்து
அவள் கண்களிடம்
காதல் சம்மதம் கேட்கிறது!!!.