மரங்களின் குழந்தைகள்

========================
சூரியன் அஸ்தமிக்கும் வேளை
விடிகின்ற எங்களின் பொழுதுகள்
விடிகின்ற வேளை
அஸ்தமித்து விடுகிறது

நிலவு மட்டும் உலவும்
எங்கள் வானம்
சூரியனை காண்பதில்லை.

தாய்ப்பாலன்றி வேறு
எப்பாலும் அருந்தா எங்கள்
குழந்தைகளின் ஆரோக்கியம்
உங்கள் குழந்தைகளுக்கு வெகுதூரம்.

தலைகீழாய் கிடக்கும்
இந்த உலகத்தை இருட்டில்
நேராக காணும் பாக்கியம் படைத்தவர்கள்
நாங்கள் என்றாலும்
சூரியனை தரிசிக்கும் கண்கள் இல்லா
துர்பாக்கியசாலிகள்.

மலட்டு மரங்களுக்கு
கருப்புக்க்காயகளாய் தொங்கும்
எங்களின் உருவங்கள்
தாய்மையை அளிப்பதால்
நாங்களும் குழந்தைகளாகிறோம்

உண்பதும் கழிவும் ஒருவாயில் என்றாலும்
ஒரு சில வியாதிகளுக்கு
மருந்தாகி மடியும் வௌவால்கள்
எங்களின் தியாகம்
மனிதரிகளில் இல்லாதது.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Dec-17, 3:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 102

மேலே