வாழ விடு
உன்னிடம் முத்தெடுக்க வந்தவர்களை பத்திரமாய் அனுப்பி
விட்டு ஊர் தேடிவந்து
மக்களை கொன்று குவித்தது ஏன்?
முத்துக்கள் குறைந்து விட்டன என்றா
மழலைகளை விழுங்கி வைத்தாய்?
பவழங்கள் மறைந்து போயின என்றா பாவைகளை
வளைத்து போட்டாய்....
வீரம் குறைந்து போனதால்
ஆடவர்களை அள்ளித் தின்றாயோ?
விவேகம் மங்கிப் போனதால்
முதியவர்களையும்
கொன்றுப்போட்டாய்?
உன் ஆசைகள் அடங்கிப்போயிற்றா?
அகோரப் பசி தீர்ந்துப் போயிற்றா?
இரத்த வாடை கண்டுவிட்ட
மிருகம் போல
மீண்டும் வருவாயோ மனித வேட்டையாட......
சம பலம் உள்ளவரிடம்
சண்டையிடுவதுதானே கம்பீரம்?
புற முதுகிட்டு ஓடுபவனிடம்
என்ன உன் வீரம்?
அதற்காகவாவது விட்டுவிடேன்
எங்களை..
வாழ்ந்து விட்டு போகிறோம்
உன் தயவில்...
இயற்கையான
மரணம் வரும் வரையில்.....