என்னடா விசை அசை

என்னடா விசை, அசை?
😊😊😊😊😊😊😊😊
டேய் பட்டணத்துப் பசங்களா என்னடா அங்க 'விசை அசை'ன்னு சொல்லிட்டு சண்டை போட்டுட்டு இருக்கறீங்க? 'விசை'-ன்னா ' துரிதம், பொறி (haste, force, impulse, impetus)-ன்னு பல அர்த்தம் இருக்குது. :அசை' எதையாவது பிடித்து அசை அல்லது ஆட்டுன்னு அர்த்தம். நீங்க ரண்டுபேரும் எதுக்குடா 'விசை', 'அசை' -ன்னு சொல்லிட்டு சண்டை போட்டுக்கறீங்க?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா நான் விஜய்.
😊😊😊😊😊
நீ விசையா? என்ன விசைடா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா நான் அஜய்.
😊😊😊😊😊
நீ அசையா? அசையாம இருப்பயா?
😊😊😊😊😊
பாட்டிம்மா நாங்க ரண்டு பேரும் அண்ணன் தம்பி. நான் விஜய். அவன் என் தம்பி அஜய். எங்க ரண்டு பேர்ல யாரு பேரு உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க.
😊😊😊😊😊😊
டேய் பசங்களா உங்க பேருங்க நாஞ் சொன்ன 'விசை, அசை' -ன்னா ரண்டு பேருங்களும் தமிழ் பேருங்க. நீங்க சொல்லற பேருங்களா இருந்தா எனக்குப் பிடிக்காது. நம்ம தாய் மொழில பேரு வைக்கறதுதாண்டா நமக்குப் பெருமை. பாவம். நீங்க சின்னப் பசங்க. உங்களுக்குப் புரியாது. நீங்க ரண்டு பேரும் வீட்டுக்குப் போயி உங்க அம்மா அப்பாகிட்ட நாஞ் சொல்லறதை அப்பிடியே சொல்லணும். "எங்க ரண்டுப் பேருக்கும் இந்திப் பேர வச்சிட்டாங்களாம். எதிர் வீட்டுத் தமிழரசி பாட்டிக்கு எங்க பேருங்க பிடிக்கலையாம்" -ன்னு மறக்காம சொல்லுங்க.
😊😊😊😊
சரிங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■◆◆■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■
Vijay =victory
Ajai = invincible; unconquerable.

【【【【【【【【【【【【【【【【【【【
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (16-Dec-17, 3:14 pm)
Tanglish : ennadaa vijai asai
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே