புருச்சு சுக்கு

டேய் சுக்கு, சுக்குப் பையா? அடே புருச்சு, புருச்சுப் பையா? எங்கட போயிட்டீங்க?
😊😊😊😊😊😊
யாரைப் பாட்டிம்மா சுக்குப் பையா, புருச்சுப் பையா-ன்னு கூப்படறீங்க?
😊😊😊😊😊
வாடீ வெண்ணிலா. எங் கொள்ளுப் பேரங்களாத்தான் கூப்படறேன்.
😊😊😊😊😊😊
உங்களுக்கு மொத்தம் எட்டு கொள்ளுப் பேரன் பேத்திங்க இருக்கறாங்க. நீங்க பெத்த பிள்ளைங்கள்ல யாரோட பசங்க அந்த சுக்கு, புருச்சு? ஞாபகத்துக்கு வரலியே.
😊😊😊😊😊
அடியே வெண்ணிலா, பீக்காருல இருக்கறாளே எம் பேத்தி தென்றல் அவளோட பசங்க சுக்குவும் புருச்சும்.
😊😊😊😊😊😊
அடடே. இளநகை அக்காவோட பையன்களா? கொஞ்சம் இருங்க ஞாபகப்படுத்திப் பாக்கறேன். .... ஆ... இப்ப அந்தப் பையன்கள் பேரு ஞாபகத்துக்கு வருது. தென்றல் அக்காவோட மூத்த பையன் புருஷ் (Purush = omnipotent personality). இளைய பையன் பேரு ஷுக் (Shuk = parrot).
☺☺☺☺☺☺
நானும் அந்தப் பேருங்களத்தான்டி வெண்ணிலா சொன்னேன்.
☺☺☺☺☺☺
நீங்க அந்த புருஷ், ஷுக் - ங்கற பேருங்கள 'புருச்சு, சுக்கு' -ன்னு உச்சரிங்க.
😊😊😊😊😊
அடியே வெண்ணிலா, நம்ம தமிழ்ல நல்ல பேருங்க இல்லாத மாதிரி எல்லாம் இந்திப் பேருங்கள அவுங்க புள்ளைங்களாக்கு வச்சிடறாங்க.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா நம்ம தமிழர்ள்ல பெரும்பாலானவங்க திரை ரசனைல முழுகிக் கெடக்கறாங்க. அதனால போட்டி போட்டுட்டு கொழந்தைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறாங்க.
😊😊😊😊😊😊
அந்த ரசனையால நம்ம தாய் மொழியே சீரழிஞ்சு போகுதடி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (13-Dec-17, 10:07 pm)
பார்வை : 195

மேலே