உம் பேரு அசிங்கமா இருந்தாலும்

ஏ பொண்ணு நீ அழ்ழகா இருக்கற. நான் உன்ன விரும்பறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?
😊😊😊😊😊
க்யா ஹை துஷ்மன்?
😊😊😊😊
என்னடா இது இந்திக்காரப் பொண்ணா இருக்குது. க்யா -ன்னா என்ன? அந்த 'ஹை' -க்கு என்ன அர்த்தம்-ன்னு தெரிலயே. எம் பேர துஷ்மண் -ன்னு சொல்லறாளே. நான் ஒண்ணுக்கும் உதவாத தூசி மண்ணு -ன்னு சொல்லறாளோ என்னவோ? நான் வேலை வெட்டி இல்லாம பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு திரியறது இவுளுக்கு தெரிஞ்சிருக்குமோ. என் நாம் கபாலி. தும் நாம்?
😊😊😊😊😊
அரே துஷ்மன்....
😊😊😊😊😊
என்னடா இது மறுபடியும் தூசு மண்ணு-ன்னு சொல்லறாளே.
தும் நாம். தும் நாம். தும் நாம். எப்படியோ அவுளுக்குப் புரிஞ்சா சரி.
😊😊😊😊😊
அஜிங்க்யா (Ajinkya)
😊😊😊😊😊😊
அசிங்கியாவா? பேரு அசிங்கயாவோ அசிங்கமாவோ இருந்தாலும். உன்னோட அழ்ழகு என்ன சொக்க வைக்கது அசிங்கியா. என்ன லவ் க்யா?
😊😊😊😊😊😊
அரே துஷ்மன் ஜாவ்ரே ஜாவ்.
😊😊😊😊😊😊
என்னோட கருப்பு அழகு அந்த அசிங்கியாவுக்கு பிடிக்கல போல இருக்குது. என்ன தூசி மண்ணுன்னு சொல்லிட்டுப் போறாளே. ரவிச்சந்திரன் படத்துப் பாட்ட வேற பாடிட்டு போறாளே. நான் இந்தி படிச்சிருந்தா இந்த கருப்பு அழகைப் புரிய வச்சிருப்பேன். சரி. கத்துட்டாப் போச்சு. மாநகர்ல எத்தனையோ இந்தி ரதிங்க இருக்கறாங்க.
■■■■■◆■■■■■■■■■■■■■■◆■■■◆◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■■■◆◆◆
Ajinkya=invincible

எழுதியவர் : மலர் (17-Dec-17, 2:39 pm)
பார்வை : 303

மேலே