எம் பேரு கனக்

அடியே செவத்த புள்ள, உன்னப் பாத்தா பட்டணத்துக்காரி மாதிரி இருக்கற. எங்கிருந்து வந்த, யாரு வீட்டுக்கு வந்திருக்கற?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா நான் உங்க தெரு கடைசி வீட்டில இருக்கற பொன்னம்மா பாட்டியோட பேத்தி. நான் ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறேன்.
😊😊😊😊😊
ஓ....நீ பொன்னம்மா பேத்தியா. பொன்னம்மாளும் நானும் பொறந்து, வளந்தது ஒரே ஊரு. கல்யாணம் ஆகி ரண்டு பேரும் வாழ வந்ததும் ஒரே ஊரு. நாங்க ரண்டு பேரும் சின்ன வயசில இருந்தே நல்ல தோழிங்க. சரி, உம் பேரு என்ன? தங்கம் சொலிக்கிற உங் கையில இருக்கற குட்டி வாணலியும் தங்கம் மாதிரி மின்னுது.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா எம் பேரு கனக்.
😊😊😊😊😊😊
என்ன கணக்குடீ. மனக்கணக்கா? இல்ல கூட்டல் கழித்தலா? இல்ல வகுத்தல் பெருக்கலா?
😊😊😊😊😊
எம் பேரு கனக். கனக் கனக் தான். நீங்க சொல்லற கணக்கெல்லாம் எனக்குத் தெரியாதுங்க பாட்டிம்மா. நான் ஹைதராபாத்தில கல்லூரில படிக்கறேன். தமிழ்ல பேசமட்டுந்தான் தெரியும்.
😊😊😊😊
சரி, உனக்கு 'கணக்கு' -ன்னு எதுக்குடீ பேரு வச்சாங்க. ஒரு பெரிய மொதலாளிகிட்ட கணக்கு வழக்கப் பாக்கற ஆளைத் தான் கணக்குன்னு கூப்புடுவாங்க. உனக்கேன்டி 'கணக்கு' -ன்னு பேரு வச்சாங்க.
😊😊😊😊😊😊
சரி. பொன்னம்மா பாட்டியோட கடைசி பொண்ணோட பேரு என்ன? சொல்லுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
அவ பேரு தங்கம்மா. நாங்கெல்லாம் அவள 'தங்கம்' -ன்னு கூப்புடுவோம்.
😊😊😊😊😊😊
எங்கம்மா பேரைத்தாம் பாட்டிம்மா எனக்கு வச்சிருக்காங்க.
😊😊😊😊😊
நீ உம் பேரு 'கணக்கு' -ன்னு சொன்ன?
😊😊😊😊😊😊
எம் பேரு கணக்கு இல்லங்க பாட்டிம்மா. கனக். இந்தில 'கனக்' -ன்னா 'தங்கம்' -ன்னு அர்த்தம்.
😊😊😊😊😊
இந்திப் பேரைத்தான் உனக்கு வச்சிருக்கறாங்களா?
😊😊😊😊😊😊
உங்க பட்டிக்காட்டு ஊரிலயே தெருவுக்கு ரண்டு பிரியா, ஸ்வாதி, ஸ்வேதா, ஹேமா (தங்கம்) இருக்கறபோது பெரிய பட்டணத்தில பொறந்து வளர்ற எனக்குத் தமிழ்ப் பேரையா வைப்பாங்க.
😊😊😊😊😊
ஆமாம்டி கணக்கு, நீ சொல்லற கணக்கும் சரி தான்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.◆◆●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (18-Dec-17, 11:01 pm)
பார்வை : 230

மேலே