விஷ்ணுபுரம் விருதுவிழா---ஆர் எஸ் புரம் கோவை ----16122017

இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 16 ஆம்தேதி காலை 9 மணிக்கு முதல் அமர்வு ராஜஸ்தானி சங் அரங்கத்தில் தொடங்கும். நண்பர்கள் முன்னரே வந்துவிடும்படி கோருகிறேன்.

இம்முறை முதல்நாள் முதலே அரங்கை முறைப்படுத்தியிருக்கிறோம். தமிழில் தடம்பதித்த படைப்பாளிகள், இவ்வாண்டு கவனத்தை ஈர்த்த புதியபடைப்பாளிகள், மலேசியப்படைப்பாளிகள், விழாவின் சிறப்பு விருந்தினர் என வருகையாளர்கள் நான்கு தரப்பினர்.


முதல்வகை படைப்பாளிகளில் போகன், ஆர்.அபிலாஷ்,வெயில் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். போகன் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சென்ற சில ஆண்டுகளாக தமிழில் மிகவும் கவனிக்கப்படுகிறார். கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகப்புத்தகம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.அபிலாஷ் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிவரும் கட்டுரைகள் மூலம் பெரிதும் விவாதிக்கப்படுபவர். அவருடைய கால்கள், கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.


இரண்டாம் வகைப் படைப்பாளிகளில் தூயன், சுரேஷ் பிரதீப், கே.ஜே.அசோக் குமார், விஷால்ராஜா என நான்குபேர் கலந்துகொள்கிறார்கள்.இவர்களைப்பற்றிய விரிவான அறிமுகங்களும், விமர்சனக்கட்டுரைகளும் இந்தத்தளத்தில் முன்னரே வெளியாகியிருக்கின்றன இவர்களின் அரங்குகள் 16 ஆம் தேதி நிகழும்.


மலேசியப்படைப்பாளிகளில் ம.நவீன்,டாக்டர் ஷண்முக சிவா ஆகியோர் கலந்து கொள்ளும் அமர்வு நிகழும். மலேசிய இலக்கியங்கள் பற்றிய உரையாடல் இது. ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த காதல். பறை,வல்லினம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர். இலக்கியவிமர்சகர், சிறுகதை எழுத்தாளர். மலேசிய இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளின் மையமான கூலிம் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானனந்த சரஸ்வதி அவர்களும் கலந்துகொள்கிறார்கள்.







விழா அழைப்பாளர்களில் பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ் பரியத், சீ.முத்துசாமி ஆகியோரின் அரங்குகள் இரண்டாம்நாள் நிகழும். பி.ஏ.கிருஷ்ணன் தமிழில் பெரிதும் வாசிக்கப்படும் படைப்பாளி. ஆங்கிலத்திலும் எழுதிவருபவர். புலிநகக்கொன்றை, கலங்கியநதி ஆகியவை இவருடைய நாவல்கள்.

தமிழின் முதன்மையான படைப்பாளிகளாகிய நாஞ்சில்நாடன், தேவதேவன், பாவண்ணன், க.மோகனரங்கன்,சு,வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், இசை, கே.என்.செந்தில், பாரதி மணி, சுப்ரபாரதிமணியன் கீரனூர் ஜாகீர்ராஜா காலப்பிரதீப் சுப்ரமணியம் என பலர் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை விருதுபெற்ற வண்ணதாசன் கலந்துகொள்கிறார்



விஷ்ணுபுரம் விழாவைப்பொறுத்தவரை மேடையிலிருப்பவர், அரங்கில் இருப்பவர் என்னும் வேறுபாடு எப்போதுமில்லை. அரங்கில் தமிழின் பெருமைமிக்க படைப்பாளிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். சென்றமுறை விருது பெற்றவர்கள் இப்போது அரங்கிலிருக்க சென்றமுறை வாசகர்களாக வந்து அரங்கிலிருந்த தூயன், சுரேஷ்பிரதீப் போன்றவர்கள் இன்று மேடையில் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தின் இயல்பான வழிமுறை இதுவே

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்



இடம் ராஜஸ்தானி சங் அரங்கம்

No 579, D B Road,R S puram, – 641002

தொடர்புக்கு
9894033123, 9965846999, 7339055954

எழுதியவர் : (16-Dec-17, 8:32 pm)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே