உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி9
" ஆரோரிராரோ, என் செல்லங்களே! நீங்க கண்ணுறங்கி சோம்பல் முறித்து நாளைய நனவுகளை இன்றைய கனவுகளாய் கண்டு பண்புள்ள மனிதர்கள் சத்தியவழியில் வாழ என் செல்லங்களே! பாட்டி நான் உங்களுக்காக பாடுகிறேன் தாலாட்டு. ", என்று காயத்ரி அம்மாவின் தாலாட்டில் குழந்தைகளிரண்டு கண்ணயர ஜெனிபர் சமையல் வேலைகளில் மூழ்கிப் போனார்.
இரவு ஆனது. ஜெகன் தன் பணி முடித்து வீடு திரும்பினான்.
சிறிது நேரத்தில் கனகராஜும் மேரியம்மாவும் வர, ஒன்றாக உணவு அருந்தினர்.
குழந்தைகள் அழுதிட ஜெனிபர் சென்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட, " ஏன்பா! குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? ", என்று கந்தசாமி கேட்டார்.
" குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு இப்போது அவசரம் ஒன்றுமில்லை. எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்த பெரியவரிடம் கேட்போம். ", என்றார் ஜெகன்.
" அதுவும் சரிதான்பா. ", என்றிட, அனைவரும் தூங்கச் சென்றனர்.
ஜெகன் மொட்டை மாடி வந்து நின்றிருந்தான்.
அவனுடைய மனதில் சில சந்தேகங்கள்.
அவை சமுதாயத்தைப் பற்றியவை.
அமைதியான குளமாக நாமிருந்தால் நம்மில் கல்லெறிவதே இன்றைய சமுதாயத்தின் வழக்கம்.
இவ்விடத்தில் வாசகர்களுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக் கொள்கிறேன்.
என் கருத்தே சிறந்தது என்ற எண்ணத்தில் இக்கதையை நான் எழுதவில்லை.
உத்தமமான எண்ணங்களை செயலாக்கினால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டவே இக்கதை எழுதியிருக்கிறேன்.
சரி. கதைக்குள் போகலாம்.
ஜெகனைத் தேடிக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தார் ஜெனிபர்.
ஜெகனின் முகம் வாடியிருந்தது.
" இப்போது என்னவாயிற்று? முகத்தில் ஏனிந்த வாட்டம்? என்றுமில்லா அதிசயமாய். ", என்றார் ஜெனிபர்.
" ஒன்றுமில்லை ஜெனி. இந்த மனித சமுதாயமே பிடிக்கவில்லை. அவர்களுடைய சூழ்ச்சியும், தந்திரமும்.
எப்போது பார்த்தாலும் எவனை எப்படி கெடுக்கலாம்? என்று சிந்திப்பதிலேயே செலவிடுகிறார்கள்.
மது போதையில் தள்ளாடும் ஆண்ணும் பெண்ணும். கேட்டால் நாகரீகத்தின் வளர்ச்சியாம். ", என்று கோபமாகக் கொப்பளித்தார் ஜெகன்.
புன்னகையோடு ஜெகனைப் பார்த்த ஜெனிபர், " நீங்க இப்படி பேசி நான் பார்த்ததே இல்லைங்க. ", என்று ஜெகன் மனதை ஆழம் பார்த்தாள்.
" ஜெனி! என்னை ஒரு காதலனாகவும், ஒரு கணவனாகவும் உனக்குத் தெரியும்.
சமுதாயத்தில் நானும் ஒரு மனிதன் என்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரூந்து நிலையங்களில் கையேந்தும் கூட்டத்தைப் பார்த்தாலே என் நெஞ்சு பதறும். ", என்றிட, " எனக்கு அதெல்லாம் தெரியும்ங்க. ", என்றார் ஜெனிபர்.
" உனக்கு எப்படி தெரியும்? ", என்று ஜெகன் கேடக, " உங்கள் டைரிகளைப் படித்தேன். அதில் நம்மைப் பற்றி எழுதியதைவிட சமுதாயத்தைப் பற்றியே எழுதி இருந்தீர்கள். ", என்றார் ஜெனிபர்.
" நான் என் மன அமைதியைத் திரும்பப் பெற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? ", என்று ஜெகன் கேட்க, " நாளை அந்த காட்டிற்குப் போய் நம்ம பெரியவரிடமே கேட்கலாம். அவரே இதற்கு தீர்வு காண வல்லவர். ", என்றார் ஜெனிபர்.
" ம்ம். சரி. ", என்ற நம்பிக்கையோடு ஜெகன் படுக்கைக்கு சென்றார் ஜெனிபருடன்.
பொழுது புலர்ந்தது.
குடும்பத்துடன் கிளம்பினார்கள்.
வழியில் புறாக்களும் கண்டு குரங்குகளிடம் தகவல் கொடுத்தன.
அங்கு பலத்த வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
" நடந்து வந்ததால் கலைத்திருப்பீர்கள்.
பழங்களைச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டு ஓய்வெடுங்கள். ", என்றார் அந்த பெரியவர்.
பெரியவருக்கு நன்றி கூறி அனைவரும் பழங்களை புசித்து பசியாறி ஓய்வெடுத்தனர்.
பெரியவர் தற்போது தனது உடல் உரோமங்களை வெட்டிவிட்டு மனிதனைப் போல் ஆடை அணிந்து காணப்பட்டார்.
ஜெகனுக்கு அதை நம்பவே முடியவில்லை.
ஆச்சரியத்தில் கண்கள் விரியப் பார்த்தான் ஜெகன்.
புன்னகைத்த பெரியவர், " விடியட்டும். விடிந்ததும் உன் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்துபோகும். ", என்றார்.
அப்படியே பெரியவருக்கு அருகில் ஜெகன் கண்ணுறங்க பெரியவர் மட்டும் விழித்திருந்தார்.
காலையில் அனைவரும் நீராடி மாற்று உடையணிந்து வர,
பெரியவர் தனது குகை வாயிலில் நின்றிருந்தார்.
அனைவரும் அங்கு வந்து சேர விலங்குகளனைத்தும் திருவிழா கோலம் கொண்டனர்.
குழந்தைகளைப் பார்த்த பெரியவர் முதலில் பெண் குழந்தையை தன் கைகளில் வாங்கினார்.
" ஆஹா!. இவள் கண்களில் கல்வி ஞானம் தெரிகிறது.
இவள் அனைத்து பாடங்களையும் கற்று போதிக்கும் ஆசிரியராக ஆவாள்.
ஆகவே, இவளுக்கு தமிழ்செல்வி என்ற பெயர் வைக்கிறேன். ", என்றார் அந்த பெரியவர்.
அனைவரும் மகிழ்ந்தனர்.
பிறகு, ஆண் குழந்தையை தனது கைகளில் வாங்கிய பெரியவர், " ஆஹா! இவன் கண்களில் பயமே இல்லை. சிறந்த வீரனாக ஒரு காவல் அதிகாரியாக ஆவான்.
ஆதலால் இவனுக்கு தமிழ்செல்வன் என்ற பெயர் சூட்டுகிறேன். ", என்றார்.
அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக, அங்கு குரங்குகளின் நடனம் ஆரம்பமாகியது.
பிறகு அனைவரும் பசியாற பெரியவர் ஜெகனையும் ஜெனிபரையும் தனியே அழைத்துச் சென்றார்.
அங்கு மூவரும் கற்களின் மீது அமர, குழந்தைகள் பெற்றோர் மடியில் அமர வைக்கப்பட்டன.
பெரியவர் ஜெகனிடம் ஏதுவும் கேட்கவில்லை.
தனது ஆத்மார்த்தமான உரையைத் துவங்கினார்.
" இந்த வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஆனால், நாம் தான் அதை கடினமாக்கிக் கொள்கிறோம்.
மனித சமுதாயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள்.
அவர்களுடைய வேதங்கள் தெளிவாக இல்லை. ", என்றவர் அதை ஒரு கதையின் மூலம் உணர வைக்க பழங்காலக் கதையொன்றை சொல்லலானார்.
" முன்னொரு காலத்தில் மனிதர்கள் இருவருக்கு வேதம் என்றால் என்ன? என்பதில் சந்தேகம் வந்தது.
அதைத் தீர்த்துக் கொள்ள உலகமெல்லாம் சுற்றித் திரிய எங்கும் சரியான விளக்கமில்லை.
பின்னர் சிவபெருமானிடம் கேட்க கைலாயம் சென்றார்கள்.
அங்கு, " வேதம் என்றால் என்ன? ", என்ற கேள்வியைக் கேட்டிட சிவனுக்கே அதில் குழப்பம் ஏற்பட்டது.
திருமாலுக்கு தெளிவாக விளக்கத் தெரியவில்லை. பிரம்மனிடம் கேட்க அவருக்கு தெரியவில்லை.
" வேதம் தெரியாமல் நீரெல்லாம் படைப்பு தொழில் புரிகிறீர். ",என்று சிவன் உடுக்கையால் பிரம்மன் தலையில் அடித்தார்.
கிழக்கின் அதிபதியான இந்திரனிடம் கேட்க இந்திரன் விழித்தான்,
சுகபோகத்தில் ஞானமிழந்த ஆந்தையாய்..