சிரிப்பு

சிரிப்பு! சிரிப்பு!!
..
வாய்விட்டு சிரித்துவிட வேண்டும்! இல்லை எனில் நோய் நம்மை சிரிப்பாய் சிரிக்க வைத்துவிடும்!
..
சிரிப்புகள் வாய்களில் இருந்து வெளிப்படும் இசைகள் அல்ல!
..
உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் உள்ளேயும் சிரிப்புகள் உள்ளது!
..
தலையில் இருக்கும் சிரிப்பு உனது அறிவும், சிந்தனைகளையும் வெளியே கொண்டு வருவதால் மூளைக்கு கிடைக்கும் சிரிப்பு!
..
நிம்மதியாக தூங்கி விழித்தால் உன் கண்களில் தெரியும் உற்சாகத்தின் சரிப்பு!
..
நல்ல நறுமணங்களை நீ சுவாசித்தால் உன் மூக்கில் வந்துவிடும் சிரிப்பு!
..
உதவி கரங்களை நீ எடுத்து கொடுத்தால் உன் கைகளுக்கு கிடைத்துவிடும் நன்றியின் சிரிப்பு!
..
மனதார மகிழ்ச்சியாக மனதை காயபடுத்தாமல் இருந்தாலே வருவாரே மனதிற்குள் இறைவனின் சிரிப்பு!
..
மனித நேயத்தோடு அன்பின் புரிதல்கள் துளிர்விட்டால் இங்கு வாழ்வது இருதய துடிப்பின் சிரிப்பு!
..
பட்டினி கிடந்து உணவு கிடைத்தவுடன் வயிற்றுக்கு கிடைப்பது ஆனந்த சிரிப்பு!
..
விரல்களுக்கு இடையில் எழுது கோல் பிடித்து நின்றால் சொற்களும் வந்து நிற்குமே புன்னகை சிரிப்பு!
..
நடந்து! நடந்து!! பல மைல்கள் கடந்த போதிலும் இலக்கை அடைவதற்கு ஓடும் ஓட்டத்தில் கால்களும் உனக்கு கொடுக்குமே சிகப்பு கம்ளம் விரிப்பு அதுவே வெற்றியின் பூரிப்பு!
..
சிரியுங்கள்! நீங்கள் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வாழும் போது!
..
அந்த சிரித்தமுகம் உங்களுக்கு பல சிரிப்புகளை பெற்று கொடுத்துவிடும்!
..
உடல் முழுவதும் இனி சிரிப்பலைகள் உங்களை சிரிக்க வைக்கட்டும்!!!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (19-Dec-17, 2:52 am)
Tanglish : sirippu
பார்வை : 226

மேலே