தலைப்பில்லா காதல்

இனி நொடிகள் தேவை இல்லை ,,,,,
என் பிணிகள் தீர வில்லை ,,,,,
அவள் மொழிகள் பேசவில்லை ,,,,,,
இனி தனிமை மோசமில்லை ,,,,,
நித்தமும் ஓர் பயம் நெஞ்சினுள்
அக்னி சாட்சியாய் அவள் கரம் சேர்வேனா ?
இல்லை அவளுக்கே தெரியாமல்
மண்ணில் கரைவேனா ?
ஏனோ என் மனதை
எடுத்தெறிந்து சென்றவளை ,,,,
மறக்க முடியாமல் பொறுக்குகிறேன்
நினைவுகளை ,,,!
அவளால் மையம் கொண்ட
காதல் புயல் ஒன்று கரை கடக்க முடியாமல்
தவிக்கிறது மனதுடன் .....